This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Saturday, November 10, 2012
கோலாகலமாக நடக்கும் 31-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி
அரசியல் சாசனம்:முஸ்லிம் மார்க்க அறிஞர்களுடன் முர்ஸி பேச்சுவார்த்தை!
அரசியல் சாசன உருவாக்க கமிட்டியுடனும் மார்க்க அறிஞர்களின் குழுவினர் விவாதித்தனர். எகிப்தின் பிரமுக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் முர்ஸியின் அழைப்பை ஏற்று அதிபரின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஷேக் அபூஇஸ்ஹாகுல் ஹுவைனி, டாக்டர் முஹம்மது அப்துல் மக்ஸூத் உள்ளிட்ட பிரபல மார்க்க அறிஞர்கள் இக்குழுவிற்கு தலைமை ஏற்றனர்.
மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அமைப்புகளைச் சார்ந்த மார்க்க அறிஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஸலஃபிகள், ஷியாக்கள் உள்ளிட்டோரும் மார்க்க அறிஞர்களுடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த அஸர்(மாலை நேர) தொழுகையை முர்ஸி தலைமையேற்று நடத்தினார். அவருக்குப் பின்னால் அனைத்துப் பிரிவைச் சார்ந்த மார்க்க அறிஞர்களும் தொழுகையை நிறைவேற்றினர்.
Thursday, November 8, 2012
ஹமாஸ் அலுவலகங்களை மூடியது சிரியா பஸ்ஸார் அரசு!
சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் அடக்குமுறை கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட ஹமாஸ், சிரியா அரசுடனான உறவை துண்டித்தது. சிரியா மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அய்மன் தாஹா தெரிவித்துள்ளார்.
1990-ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் அலுவலகங்கள் டமாஸ்கஸில் இயங்கி வந்தன. ஹமாஸ் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அலின் அலுவலகமும் டமாஸ்கஸில் செயல்பட்டு வந்தது. மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கியவுடன் மிஷ்அல் கெய்ரோ, காஸ்ஸா ஆகிய நகரங்களில் வசித்து வருகிறார். மேலும் ஹமாஸின் முக்கிய அலுவலகங்கள் காஸ்ஸாவுக்கு மாற்றப்பட்டன.
பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!
இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.
இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .
சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.
பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
Tuesday, November 6, 2012
RSS செயலாளர் மீது தாக்குதல்: அரசு பஸ் எரிப்பு
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் திருப்பூர் மாவட்ட RSS செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
பஸ் எரிப்பு, கல்வீச்சு
இதனிடையே ஆனந்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் மீண்டும் இரவு 9 மணியளவில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் சில பேருந்துகளின் மீதும் மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதன்பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். அதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
கடையடைப்பு, பதற்றம்
ஆஸ்.எஸ்.எஸ் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதற்றம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் இன்று கடையடைப்பு நடத்த இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மண்டல மாநாடு - பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? நீதிக்கான முழக்கம்
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் S.M. ரஃபீக் அஹமது , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானிஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பியதில்லை என்பதே வரலாறு நமக்குப் பகரும் சாட்சியாகும். நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித் மற்றும் முஸ்லிம்களை முன்னேற்ற அரசும் பயனுள்ள முயற்சிகளை எடுப்பதில்லை. இந்த சமூகங்களை முன்னேற்ற பாடுபடக்கூடிய கட்சி மற்றும் இயக்கங்களையும் நசுக்குவதில் குறியாக உள்ளது. அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை அரசு மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள். நமது இந்திய ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு சிறிதளவும் மாறுபடாத வகையில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். இத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு தலித் சமுதாயம் துணை நிற்க தயாராக உள்ளது என்பதை இம்மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
பின்னர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தனது உரையில், உளவுத்துறையிலும் காவல்துறையிலும் உள்ள அதிகாரிகள் ஒருசார்பு நிலையில்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல் தனது உரையில், “அரசியல் சாசன சட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவுகூரும் முகமாகவும் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். UAPA போன்ற கருப்புச் சட்டங்களால் அநியாயமாக கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்படும் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறோம். இதுமட்டுமின்றி கல்வி, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டை குறி வைக்கின்றனர். பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். ஒடுக்கப்பட்டோர் சக்தியடைவதற்கெதிரான சதிகளை முறியடிக்க தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்று கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில், “தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு உருவமே பாப்புலர் ஃப்ரண்ட் என்று சில வகுப்புவாத சிந்தனையுடைய அதிகாரிகள் சித்தரித்து வருகின்றனர். ஆனால் 2001ம் ஆண்டு சிமியை தடை செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 1989ல் இருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் சமூகப் பணிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.
இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் S. சஃபியுல்லாஹ் இருவரும் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தனர். நிறைவாக பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் E. ஷாஹித் முஹம்மது நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. இம்மாநாட்டில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? நீதிக்கான முழக்கம் - மதுரை மண்டல மாநாடு
மாலை 6.45 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மதுரை மாவட்ட தலைவர் இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது நஸ்ருதீன் தலைமையுரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட்மாநில செயலாளர் ஆரிப் பைசல் , அரசு டவுன் காஜியார் காஜா மொய்னுதீன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் நஜிமுதீன் , பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாவட்ட தலைவர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீப் , பாப்புலர் ப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது , எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி , பா.ம.க மாநில துணைத் தலைவர் கஸ்ஸாலி , நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்டின் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

















